search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்களின் அளவு"

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×